National

Tamil Nadu

Latest News

Subscribe to our website here

EDITOR ANSWERS

கேள்வி பதில் பகுதி

Q & A Section

வாசகர்களின் கேள்விகளுக்கு ஆசிரியர் குழு பதில்கள் கேள்விகளை இங்கே கேட்கலாம் Editorial Board will answer to the Reader’s Questions Please use the below form to ask the Editor

  நந்தகுமார், சென்னை

  கே: நாடகம் நடத்துகிறார். காங்., – எம்.பி., திருநாவுக்கரசர் கூறியதாவது: போகாத ஊருக்கு அண்ணாலை வழி கூறுகிறார். காவிரி பிரச்னையில், தமிழக தலைவராக நீங்கள் என்ன செய்தீர்கள் என, எதிர்காலத்தில் யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நாடகம் நடத்துகிறார்.கர்நாடக முதல்வர் பொம்மையின் வீடு அல்லது பிரதமர் மோடி அலுவலகம் முன்தான் போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, தஞ்சையில் போராட்டம் நடத்தினால், அதனால் என்ன விளையப் போகிறது? காங்., அரசு கர்நாடகாவில் இருந்த போதும், இதே போன்ற பிரச்னைகள் தமிழக காங்கிரசுக்கும் இருந்தன. அப்போது, தமிழக அரசுக்கு தமிழக காங்., உறுதுணையாக இருந்ததே தவிர, இப்படி நாடகம் நடத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார். இது பற்றி ஆசிரியர் கருத்து ?

  ப: அடடே! அண்ணாமலை இனிமேல் திருநாவுக்கரசரிடம் ஆலோசனை கேட்கலாம். ஆனால் ஒரு உண்மையை மறந்து விட்டார் திருநாவுக்கரசர். காவிரி பிரச்சனையை எதிர்கொண்டு தீர்த்ததே நரேந்திர மோடிதான். காங்கிரஸ் அரசு வேடிக்கை அல்லவா பார்த்துக் கொண்டு இருந்தது.

  அது இருக்கட்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கையிலா உண்ணாவிரதம் இருந்தார்கள் இவர்கள்?

  ————————————————————————————————–

  புகழேந்தி, சென்னை

  கே: கோவிட் மூன்றாம் அலை ..மிக அருகிலுள்ள நிலையில், லாக்டவுனை தளர்த்துவது முறையா?
  மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளதா?

  ப: தளர்வு இல்லாமல் பொருளாதாரம் பாதிக்கப்படும். நாம் ஒரு புதிய எதிரியிடம் அகப்பட்டு தவிப்பது உண்மை.

  கடந்த 70 வருடங்களில் Health Care Localisation and Health Infrastructure Development Failure இதற்கு காரணம்.

  மூன்றாவது அலை வந்தால், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்தது அது. இரண்டாவது அலையைப் போல தீவிரமாக இருந்தால ஓரளவு கடினம்தான். தமிழகம் மட்டும் அல்ல, உலகத்துக்கே இது பொருந்தும்.

  ———————————————————————————————————

  புகழேந்தி, சென்னை

  கே: திமுக ,தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெடரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால் தமிழக நிதியமைச்சர் விலையை குறைக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார். இது தொடக்கமா?

  ப: இல்லை! தொடங்கி 50 ஆண்டுகள் ஆகி விட்டது.  ரூபாய்க்கு மூன்று படி அரிசி தொடக்கம். கையளவு நிலம் வளர்ச்சி. இது வளர்ச்சியின் அடுத்த கட்டம்.

  ———————————————————————————————————

  மணிவாசகம், கோவை

  கே: அரசியல் கேள்விகளுக்கு மட்டும்தான் பதில் கிடைக்குமா?

  ப: எதைப்பற்றி கேட்டாலும் பதில் கிடைக்கும். உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் கேட்கலாம். எனக்கு தெரிந்ததை நான் சொல்ல போகிறேன். அவ்வளவுதானே!

  ———————————————————————————————————

  ராமன், சென்னை

  கே: பெட்ரோல் விலை உயர்வுக்கு வரிக் கொள்கையல்ல… கொள்ளையே காரணம்: ப.சிதம்பரம் – இது பற்றி உங்கள் கருத்து?

  ப: அவரவருக்கு அவரவர் அனுபவம்  பேசுகிறது ——————————————————————————————————— Dhanasekar, Madurai

  Q: During the recent meeting of J&K leaders with the PM, the J&K leaders, particularly Omar Abdullah, wanted the Assembly Delimitation should be taken up like any other states. What is your opinion?

  A: It is contradictory that he also wanted Article 370! When he says the delimitation process should be as per the other States, then Jammu & Kashmir also should have same status as other States, not having any special provision such as Article 370.

  He wants both the special status and the special privilege, which is not acceptable to me.

  ———————————————————————————————————

  Balaji from Coimbatore

  Q: What do you think will be impact of newly formed Tamil Nadu Economic Advisory Board?

  Q: Fiscal Management largely rests with the Central Government and the RBI controls the banking sector. There is nothing big these experts can do. But with their rich experience they can certainly set Short Medium Long term goals in sectors like Tourism, Agriculture, Food Processing & Industry in general.

  ———————————————————————————————————

  சுப்ரமணியன், சென்னை

  கே: பிரசாந்த் கிஷோர் – ஷரத் பவார் கூட்டணி வெற்றி பெறுமா.

  ப: மூன்றாவது அணி மூன்றாவதாக வரும். மாற்று அணி – ஜனதா போல அமைந்தால் வாய்ப்பு அதிகம். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு அணிக்கு தலைமை வகிக்கும் தலைவரும் இல்லை. இப்போதைக்கு நரேந்திர மோடியை தவிர தலைவருமில்லை.

  ———————————————————————————————————

  குப்புராஜ், சென்னை

  கே: ராஜாஜி போன்ற தலைவர்கள் இல்லாமல் போனதன் காரணம் என்ன?

  ப: கட்சிகள் எல்லாம் குடும்ப சொத்தானதும், பரவலாக சமுதாயம் சீரழிந்து போனதுமே காரணம்

  Trending Videos | Swatantra TV

  error: Content is protected !!
  SWATANTRA

  FREE
  VIEW