கோவிட் 3வது அலை அக்., நவ., மாதங்களில் உச்சமடையும்

Share this article....

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் 3வது அலை அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சம் அடையும் என விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

கோவிட் பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழு ஒன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த குழு, தற்போது கோவிட் 3வது அலை குறித்து கணித்துள்ளது. அதன்படி, 3வது அலை பாதிப்பில் நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கோவிட் வகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

latest tamil news

இக்குழுவானது, ‛தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் பட்சத்தில், கோவிட் 3வது மற்றும் 4வது அலையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது,’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும், கோவிட் 3வது அலை பாதிப்பானது அக்டோபா், நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளதாகவும், இந்த அப்போது தினசரி பாதிப்பு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2796436 நன்றி தினமலர்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
SWATANTRA

FREE
VIEW