உண்மையை உரக்கச் சொன்ன அண்ணாமலை

Share this article....

நேற்று தமிழக பா ஜ க சார்பில் நடந்த உண்ணாவிரத அறப்போறாட்டத்தின் போது தமிழக பா ஜ க மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை தனது பேச்சில் சன் டி. வி பற்றி பேசி உண்மையை அப்பட்டமாக வெளிக் கொணர்ந்தார். தனது பேச்சில் மாறன் குடும்பத்து சன் டி. வி. கர்நாடகாவில் உதயா டி. வி. என்ற பெயரில் இயங்கி வருவது தெரியும்.

இவர்கள் அரசியலிலும் உள்ளதால் இவர்களது கருத்து பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் உண்மை நிலை என்ன? இவர்கள் இங்கே தமிழ்நாட்டில் ஒரு நிலையும், அங்கே கர்நாடகாவில் ஒரு நிலையும் எடுத்து இரண்டு மாநிலத்திலும் சீரியல் ஓட்டி பயணம் சம்பாதிக்கிறார்கள். சம்பாதிப்பதில் தவறு ஏதும் இல்லை என்றாலும் அரசியலில் உள்ள குடும்பம், இங்கே தமிழகத்தில் ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்து விட்டு நேரெதிர்நிலைப்பாட்டை கர்நாடகாவில் எடுப்பது தவறு.

நாங்கள் அந்தந்த மாநில செய்திகளை கூறுகிறோம் என்று கூறி தப்பிக்க முடியாது. ஏனென்றால் செய்திகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்கள் சொந்த கருத்துக்களையும் பரப்பி, ஒரு கட்சி சார்பு நிலை எடுக்கும்போதுதான் பிரச்சனை.

இது நிச்சயம் நடுநிலைமை இல்லை. இதைத்தான் தமிழக பா ஜ க தலைவர் அண்ணாமலை நேற்று பட்டவர்த்தனமாக தனது பேச்சில் குறிப்பிட்டார். நமக்குத் தெரிந்து தமிழக பா ஜ க வில் முதல் முறையாக இப்படி ஒரு அதிரடி பேச்சை பேசிய முதல் தலைவர் அண்ணாமலைதான்.

சன் டி. வி, மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் – both Print & Television Media – இப்படிப்பட்ட இரட்டை நிலையை எடுத்தே காலத்தை ஓட்டிக் கொண்டுள்ளனர். இதற்கு ஒரே காரணம் நரேந்திர மோடியை, மத்திய பாஜக அரசை எதிர்க்க வேண்டும் என்பதே. மக்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

மத்திய பாஜக அரசை, அதன் குறைகளை சுட்டிக்காட்டுவாதிலும், நல்ல விஷயங்களை எடுத்து சொல்வதிலும் தவறு ஏதும் இல்லை. அதை நாம் வரவேற்கிறோம். ஆனால் எல்லாவற்றையும் எதிர்ப்பது, அதிலும் கோவிட் தடுப்பூசிக்கு கூட எதிராக குரல் கொடுப்பது என்பதெல்லாம் மக்களுக்கு எதிரான செயல்.

இதனை சரியான முறையில் எடுத்துச் சொன்ன அண்ணாமலைக்கு நமது பாராட்டுக்கள்.

இதை நாம் வரவேற்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
SWATANTRA

FREE
VIEW