பாராட்ட வேண்டிய அணுகுமுறை, பக்குவப்பட்ட தமிழக முதல்வர் – தமிழகத்துக்கு ஒரு புதிய நம்பிக்கை

Share this article....

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக வும், திமுக வும் ஒருவரோடு ஒருவர் பகைமை பாராட்டி, தனிப்பட்ட அளவில் கூட தெரு சண்டை போல நிலைமை இருந்தது. ஆனால் மத்தியிலே மற்ற கட்சிகளைப் பொறுத்த வரை அரசியல் எப்படி இருந்தாலும் தனிப்பட்ட அளவில் பெரிய அளவில் மோதல் இல்லை.

கருணாநிதி – எம் ஜி ஆர் , கருணாநிதி – ஜெயலலிதா பகை அரசியலைத் தாண்டி அவரவர் கட்சி தொண்டர்கள் கூட ஒருவரோடு ஒருவர் தனிப்பட்ட அளவில் பேசுவதையும், விழாக்கள் போன்றவைகளுக்கு செல்வதையும் தடுத்தி நிறுத்தி இருந்தது.

ஆனால் கருணாநிதி – ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இன்னும் சொல்லப் போனால், ஸ்டாலின் தலைமைக்கு வந்த பிறகு இந்த நிலையில் மிகப் பெரும் மாற்றம் வந்துள்ளது.

முக்கியமாக நேற்று அதிமுக தலைவர் மதுசூதனன் மறைவுக்கு முதல்வராக இருக்கும் ஸ்டாலின் நேரில் சென்றது நிச்சயம் மிக முக்கியமான அவசியமான மாற்றம்.

இதற்கு முன்பே கூட ஸ்டாலின் அவர்களைப் பொறுத்த வரை பெரிய அளவில் மாற்றம் தெரிவதாகவே நாம் நினைக்கிறோம். அவர் மக்களிடம் நற்பெயரை எடுக்க வேண்டும், அனைத்து தரப்பினருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவே தெரிகிறது.

இவரது இந்த நல்ல எண்ணம் நடக்க வேண்டும் என்றால் அவரது கட்சியின் மற்ற அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் இவரைப் போலவே, இவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நடப்பதைப் பார்க்கும் போது முதல்வருக்கு இருக்கும் அதே நல்லெண்ணம் எல்லோருக்கும் இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறை ஒரு பக்குவப்பட்ட தலைவரைப் போலவே உள்ளது. இது தொடர்ந்தால், அதற்கு கட்சியின் மற்ற அமைச்சர்கள், நிர்வாகிகளையும் அவர் தன்னுடைய அளவுக்கு மாற்ற முடிந்தால், நிச்சயம் அது தமிழகத்துக்கு நன்மை பயக்கும்.

இன்னும் எதிர்க் கட்சிகளையம் கலந்து ஆலோசித்து, மத்திய அரசை எல்லாவற்றுக்கும் எதிர்க்காமல், மக்களுக்கான நல்லாட்சியை தந்தால் வரலாற்றில் ஸ்டாலினுக்கு நிச்சயம் இரு இடம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

முதல்வருக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை.

(Featured image courtesy – Dinamalar)

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
SWATANTRA

FREE
VIEW